கடும் குளிரிலும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்ட ராணுவ வீரர்கள்...!


கடும் குளிரிலும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்ட ராணுவ வீரர்கள்...!
x

டெல்லியில் கடும் குளிரிலும் ராணுவ வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.

குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை அணிவகுப்பை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியிலும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர். கடும் குளிரிலும் உற்சாகத்துடன் ராணுவ வீரர்கள் தங்கள் கனத்த காலணிகளுடன் வீறுநடை போடுவதைக் காண முடிந்தது.

டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர் 1.1 டிகிரி செல்ஸியஸ் ஆக சரிந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் பனிப்போர்வைக்குள் மூடியதுபோல் உள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story