நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை சோனியா காந்தி ஆஜராகமாட்டார் என தகவல்
நேஷனல் ஹெரால்டு' வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், காங்., தலைவர் சோனியா கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திகொண்டிருப்பதால் நாளை ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை, வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி இருவருக்கும், அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியதையடுத்து, வரும் 8ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில் சோனியா காந்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தன. சோதனை செய்து பார்த்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்து உள்ளது. அவர், மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இருப்பினும் நாளை அமலாக்கப்பிரிவில் ஆஜராவார் என கூறப்பட்டது. இன்று திடீர் திருப்பமாக சோனியாகாந்தி, நாளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story