தென்கொரியாவில் கஞ்சா கடத்திய 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கைது


தென்கொரியாவில் கஞ்சா கடத்திய 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கைது
x

கோப்புப்படம்

தென்கொரியாவில் கஞ்சா கடத்திய 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

சியோல்,

தென் கொரியாவில் கூட்டு போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணிக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் அங்கு களம் இறக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 28,500 ராணுவ வீரர்கள் கொண்ட அமெரிக்கா ராணுவத்தளம் சியோலில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பியோங்டேக்கில் அமைந்துள்ளது.

இந்தநிலையில் ராணுவ பார்சல் சேவையை பயன்படுத்தி அமெரிக்க ராணுவ வீரர்கள் கஞ்சா ஆயில் உள்பட போதைப்பொருட்களை தொடர்ந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து தென் கொரிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் போதைப்பொருட்களை கொரிய ராணுவ வீரர்கள் சிலரின் உதவியுடன் அமெரிக்க வீரர்கள் கடத்தி சக வீரர்களுக்கு விற்று வந்தது தெரிந்தது. இதன்பேரில் 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 கொரிய வீரர்கள், ஒரு பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.அவர்களிடம் இருந்து கஞ்சா ஆயில், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து உயர்மட்ட விசாரணையை ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.


Next Story