பீகார் மாநில முன்னாள் எம்.பி. குற்றவாளி - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு


பீகார் மாநில முன்னாள் எம்.பி. குற்றவாளி - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
x

Image Courtacy: PTI

பயணப்படி மோசடி வழக்கில் பீகார் மாநில முன்னாள் எம்.பி. குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் அனில்குமார் சகானி. தற்போது இவர் அந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அனில்குமார் சகானி, எம்.பி.யாக இருந்தபோது பயணப்படி, அகவிலைப்படி போன்ற சலுகைகளை மோசடியாக பெற்றுள்ளார்.

அதாவது எந்தவித பயணத்தையும் மேற்கொள்ளாமலே பயணப்படியை பெற்றுள்ளார். இதற்காக போலி டிக்கெட்டுகளை வழங்கி இருக்கிறார். அந்த வகையில் ரூ.23.71 லட்சம் மோசடியாக பெற்று உள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதன்படி இந்த வழக்கில் முன்னாள் எம்.பி. அனில்குமார் சகானி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவருக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.


Next Story