மராட்டிய சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியது
இன்று நடைபெற்று வரும் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வாக உள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை தொடர்ந்து, கடந்த 1¼ ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள சபாநாயகர் தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மராட்டிய சட்டசபை சிறப்பு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வாக உள்ளார். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story