நின்றுகொண்டிருந்த பைக் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நபர்..!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். ராஞ்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிந்து பர்மன் என்ற இளைஞர், தனது 2 சகோதரிகளை இறக்கிவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தாறுமாறாக ஓடிய கார் ஒன்று இருசக்கர வாகனத்தை இடித்து விட்டு மின்கம்பத்தில் மோதியது. இதில் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பிந்து பர்மன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மது போதையில் விபத்தை ஏற்படுத்திய 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர். சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story