உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வுக்கு 4 மாதம் சிறை


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வுக்கு 4 மாதம் சிறை
x

கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் புல்பூர் பவாய் தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ரமாகாந்த் யாதவ். ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ. ரமாகாந்த் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்துவந்தது. இதில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், எம்.எல்.ஏ. ரமாகாந்த் குற்றவாளி என கூடுதலை தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு அளித்தார்.

கலவரத்தை ஏற்படுத்தி காயங்களை உண்டாக்கியதாக அவருக்கு 4 மாத சிறைத்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார்.பின்னர் எம்.எல்.ஏ. ரமாகாந்த் யாதவ் கோர்ட்டு வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர், முன்னாள் எம்.பி.யும் ஆவார்.


Next Story