டெல்லி பாகிஸ்தான் தூதரக ஊழியர் விசாவிற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் குற்றச்சாட்டு


டெல்லி பாகிஸ்தான் தூதரக ஊழியர் விசாவிற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jan 2023 3:41 PM IST (Updated: 12 Jan 2023 3:47 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், விசா வழங்குவதற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குருத்வாராவில் நடந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல பாகிஸ்தானிய விசாவிற்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். மார்ச் 2022 அந்த பெண் தூதரகத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு உள்ள ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் குற்ரஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்து நீதி கேட்டு முறையிட்டு உள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:-

விசா மறுக்கப்பட்டதால் தூதரகத்தை விட்டு வெளியேறும் போது, என்னை ஆசிப் என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி உதவ முன்வந்தார்.

என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசா அதிகாரி வரும் வரை காத்திருக்கச் சொன்னார்கள். அப்போதுதான் ஆசிப் என்னிடம் எனது தொழில், திருமண நிலை, பாலியல் ஆசைகள் மற்றும் அவற்றை நிறைவேற்ற என்ன செய்கிறீர்கள் என் அகேட்டனர்.

நான் வெளியேற விரும்பினேன் ஆனால் இன்னும் 20 நிமிடங்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன் மேலும் "அதிகாரி" அவரது வக்கிரப் பேச்சுகளைத் தொடர்ந்தார்.எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. என் மதத்தைப் பற்றியும் என்னிடம் கேட்டார்," என்று அவர் சம்பவத்தை விவரித்தார்.

1 More update

Next Story