உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிக்கிம் மாநிலம்; சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு


உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிக்கிம் மாநிலம்; சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
x

இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு சாதனை படைத்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை சிக்கிம் படைத்து உள்ளது.

கேங்டாக்,


சிக்கிம் மாநிலத்தில், ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லிகள் கலப்பு இன்றி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சிக்கிமில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சிக்கிம் மாநிலம், லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. இதனையொட்டி, கோ கிரீன், கோ ஆர்கானிக் என்ற பெயரிலான அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை ஒன்று இன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, தொலைதொடர்பு மற்றும் ஐ.டி. துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். உலக அளவில் முதல் இயற்கை விவசாய மாநிலம் என்ற சாதனையை படைத்ததற்காக சிக்கிமுக்கு மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரியுடன் சிக்கிமின் மந்திரிகள் 4 பேர் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டனர். இதனை மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story