உத்தர பிரதேசத்தில் சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அம்பேத்கர் சிலைகள்; போலீஸ் விசாரணை


உத்தர பிரதேசத்தில் சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அம்பேத்கர் சிலைகள்; போலீஸ் விசாரணை
x

Representational Image

மீரட்,

உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் சிலைகள் 2 சேதம் அடைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இதனால், கோபம் அடைந்த உள்ளூர் மக்கள், இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். முதல் கட்ட விசாரணையில், சிற்ப வேலைகள் செய்யும் நபரின் கடைக்கு வெளியே இந்த சேதம் அடைந்த சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும் தவறுதலாக சிலை சேதம் அடைந்ததும் தெரிய வந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிற்ப வேலைகள் செய்யும் நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story