பங்குச்சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு


பங்குச்சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு
x

பங்குச்சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய பங்குச்சந்தை யின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றியபோது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தியது. அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சஞ் சீவ் அகர்வால் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் என்.ஹரிகரன் ஆஜராகி வாதிட்டார்.

இந்நிலை யில் சித்ரா ராமகிருஷ்ணா , ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள் ளுபடி செய்து நீதிபதி சஞ்சீவ் அகர்வால் கடந்த 12-ந் தே தி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் சித்ரா ராமகிருஷ்ணா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி தல் வந்த் சிங் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணையில் இருந்து நீதிபதி விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


Next Story