பங்கு சந்தை முறைகேடு - சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்டு


பங்கு சந்தை முறைகேடு - சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்டு
x

பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

புதுடெல்லி,

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அண்மையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.

1 More update

Next Story