'மோக்கா' புயல் அதிவேகத்தில் நகருகிறது ..! இந்திய வானிலை மையம் தகவல்


மோக்கா புயல்  அதிவேகத்தில் நகருகிறது ..! இந்திய வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 12 May 2023 1:21 PM IST (Updated: 13 May 2023 6:46 AM IST)
t-max-icont-min-icon

மோக்கா புயல் அதிவேகத்தில் நகருகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. மோக்கா என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது.

மே 14-ம் தேதி வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், மோக்கா புயல் அதிவேகத்தில் நகருகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த புயலின் வேகம், கடந்த 6 மணி நேரத்தில் 13 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது


Next Story