பெங்களூருவில் சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை; போலீஸ் அதிகாரி எச்சரிக்கை


பெங்களூருவில் சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை; போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
x

பெங்களூருவில் சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறி வருகின்றனர். இதையடுத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணியாமலும், 'டிஸ்பிளே கார்டு' இல்லாமலும் ஓட்டுவதாக போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து போலீசார் பரிசீலித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து இணை கமிஷனர் ரவிகாந்தே கவுடா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சீருடை அணிவது மற்றும் டிஸ்பிளே கார்டு பயன்படுத்துவது கட்டாயமாகும். இந்த விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது பயணிகள் போலீசாருக்கு புகார் அளிக்கலாம். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story