8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் சாவு
8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலியானார்.
பெங்களூரு,: பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கூடி சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த தம்பதியினர் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு அதிரத் ராய் (வயது 12). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் மாணவன் அதிரத் ராய் நின்று விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக 8-வது மாடியில் இருந்து கால் தவறி அதிரத் ராய் கீழே விழுந்தான். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தான்.
தகவல் அறிந்ததும் மகாதேவபுரா போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது 8-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததால் அவன் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து மகாதேவபுரா போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.