வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோவை பகிர்ந்து பாராட்டிய கல்வித்துறை மந்திரி..!


வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோவை பகிர்ந்து பாராட்டிய கல்வித்துறை மந்திரி..!
x
தினத்தந்தி 2 Oct 2023 9:55 AM IST (Updated: 2 Oct 2023 11:29 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, கல்வித்துறை மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவாங்கூர் அரசு பள்ளியில் பயின்று வரும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பேனா, பென்சில்களைக் கொண்டு பெஞ்சில் தாளம் போட்டு தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். இதனை அவ்வழியாக வந்த ஆசிரியர் ஒருவர் தனது போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, தனது முகநூல் பக்கத்தில் அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன் குட்டி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள் - வீடியோ



1 More update

Next Story