மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 'டுவிட்டர்' கணக்கு முடக்கம்


மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டுவிட்டர் கணக்கு முடக்கம்
x

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ‘டுவிட்டர்’ கணக்கு முடக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆவார். இவருடைய டுவிட்டர் கணக்கில் ஹேக்கர்கள் (சட்டவிரோத ஊடுருவலாளர்கள்) புகுந்து முடக்கி விட்டனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி டெல்லி போலீசில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் இது தொடர்பான தகவல் தொடர்பு சாதனங்களை சமர்ப்பிக்குமாறு அவரை டெல்லி போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

1 More update

Next Story