'மந்திரிசபையில் இடம்பெற்ற வாரிசுகள்; மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம்' - ராகுல் காந்தி விமர்சனம்


மந்திரிசபையில் இடம்பெற்ற வாரிசுகள்; மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் - ராகுல் காந்தி விமர்சனம்
x

மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. அவருடன் சேர்ந்து 71 மந்திரிசபை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மந்திரிசபையில் தற்போது இடம்பெற்றுள்ள முன்னாள் எம்.பி.க்கள், முதல்-மந்திரிகள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் போராட்டம், சேவை, தியாகம் என்ற பாரம்பரியத்தை 'வாரிசு அரசியல்' என்று விமர்சிப்பவர்கள், இப்போது அதிகாரத்தின் சக்தியை தங்கள் 'அரசு குடும்பத்திற்கு' பகிர்ந்தளிக்கிறார்கள். இதுதான் நரேந்திர மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.




Next Story