திருமணமான ஆண் தற்கொலை: தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


திருமணமான ஆண் தற்கொலை: தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

திருமணமான ஆண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி,

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் மகேஷ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்கள் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில், 81 ஆயிரத்து 63 பேர் திருமணமான ஆண்கள், 28 ஆயிரத்து 680 பேர் திருமணமான பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்ற்றுக்கொள்ள உத்தரவிடக்கோரியும், தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவிடக்கோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களில் குடும்ப வன்முறைகளை கையாளுவதற்கான நெறிமுறைகளை வகுக்கவும், தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Next Story