இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு


இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு
x

கோப்புப்படம்

தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டு உள்ள அரசியல் ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட 104-வது திருத்தம் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மேலும் ஆங்கிலோ-இந்தியன் சமூக பிரதிநிதிகளுக்கான இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதை ஒருங்கிணைக்கும் வக்கீலின் பெயரை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, வக்கீல் புனித் ஜெயின் ஒருங்கிணைப்பார் என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story