ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x

கோப்புப்படம்

ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்ததால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆக்கப்பட்டார். அதை எதிர்த்து வக்கீல் அசோக் பாண்டே என்பவர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படாத நிலையில் இந்த மனு, சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக இருக்கிறது என்று கூறி, தள்ளுபடி செய்தது.

மேலும் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.


Next Story