இரட்டை இலை சின்ன விவகாரம்: ஈபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்டு


இரட்டை இலை சின்ன விவகாரம்: ஈபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 30 Jan 2023 11:53 AM IST (Updated: 30 Jan 2023 12:35 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பழனிசாமி முறையீடு வழக்கில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தயவு செய்து பதிலளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாள்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார் பழனிசாமி. அந்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.


Next Story