10 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறியதாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. எஸ்.சி / எஸ்.டி / ஒபிசி / எம்.பி.சி ஆகிய பிரிவுகளுக்குள் வராத உயர் ஜாதியினருக்கே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என்பதையும் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டினார்.
Related Tags :
Next Story