அரசு பள்ளியில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

கோப்புப்படம்
அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கக்கோரி வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மத்தியபிரதேசத்தை சேர்ந்த டாக்டரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்குர், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி உள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மாணவிகளின் சுகாதாரம் என்ற முக்கியமான பிரச்சினை எழுப்பப்பட்டு இருப்பதாக கூறி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் உதவியை நீதிபதிகள் கோரினர்.
Related Tags :
Next Story






