உத்தர பிரதேசத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கட்டடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கட்டுமான விதிகளை மீறியதால் இரட்டைக் கட்டடத்தை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் கட்டுமான நிறுவனம் விதிமுறைகளை மீறி 40 மாடி இரட்டை கட்டடத்தை கட்டியதாக அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரட்டைக் கட்டடத்தை இடிக்க கடந்த 2014 ஆம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில், கட்டுமான விதிகளை மீறி இரட்டைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த நீதிபதிகள், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story