'இந்திய சுற்றுச்சூழல் பணி' உருவாக்கக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இந்திய சுற்றுச்சூழல் பணி உருவாக்கக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

ஆட்சிப்பணி, காவல் பணி போல ‘இந்திய சுற்றுச்சூழல் பணி’ உருவாக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Supreme Court refuses to direct Centre to create independent Indian Environment Serviceபுதுடெல்லி,

இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) உள்ளிட்டவை அடங்கிய இந்திய குடிமைப் பணியின் கீழ் இந்திய சுற்றுச்சூழல் பணி என்ற புதிய பணித்தொகுப்பை உருவாக்க மத்திய அரசின் முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பரிந்துரைத்தது.

மேலும், கள அளவில் அனைத்து திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிபந்தனைகளை அமல்படுத்துவதற்கு உயர்நிலை குழுவை அமைக்கவும் இந்த குழு பரிந்துரைகளை வழங்கியது. இந்த பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், இந்திய சுற்றுச்சூழல் பணி தொகுப்பை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் டெல்லியை சேர்ந்த வக்கீல் சமர் விஜய் சிங் சுப்ரீம் ேகார்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், 'இந்திய குடிமை பணியின் கீழ் இந்திய சுற்றுச்சூழல் பணி என்ற புதிய பணித்தொகுப்பை உருவாக்க பல்வேறு உயர்நிலை கமிட்டிகளும் பரிந்துைரத்துள்ளன' என வாதிட்டார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'கோர்ட்டு அறைக்குள் அரசியல் நடவடிக்கை கூடாது, அரசியல் செய்ய வேண்டுமென்றால், நீதிமன்றத்துக்கு வெளியே செய்யலாம். இங்கு அனுமதிக்க முடியாது' என்று கண்டிப்பாக தெரிவித்தனர். பின்னர் இந்திய குடிமைப்பணியின் கீழ் இந்திய சுற்றுச்சூழல் பணி என்ற புதிய பணித்தொகுப்பை உருவாக்கக்கோரிய இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் உத்தரவிட்டனர்.


Next Story