டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!


டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!
x

பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க கோர்ட்டு தடை விதித்தது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு டெல்லி அரசு முழுத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில்,

தலைநகர் புதுடெல்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில்(என்சிஆர் பகுதி), பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாட்டோம். எங்கள் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது என்று கோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு தீபாவளி விடுமுறைக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story