தொன்மையான இடங்கள், வழிபாட்டு தலங்களுக்கு பழைய பெயரை சூட்ட ஆணையம்: பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


தொன்மையான இடங்கள், வழிபாட்டு தலங்களுக்கு பழைய பெயரை சூட்ட ஆணையம்: பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

கோப்புப்படம்

தொன்மையான இடங்கள், வழிபாட்டு தலங்களுக்கு பழைய பெயரை சூட்ட ஆணையம் அமைக்க தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சுப்ரீல் கோர்ட்டில் வக்கீல் அஷ்வினி உபாத்யாயா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் நம் நாட்டின் பல தொன்மை வாய்ந்த, கலாசார சிறப்புமிக்க இடங்களும், வழிபாட்டு தலங்களும் இங்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களால் பெயர் மாற்றப்பட்டுள்ளன.

இந்தியா, பழைய காலத்தின் கைதியாக இருக்க முடியாது. எனவே, தொன்மையான இடங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அவற்றின் உண்மையான பழைய பெயரை சூட்டுவதற்கு 'மறுபெயர் சூட்டல் ஆணையத்தை' அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியது.

இந்த மனு, பழைய பிரச்சினைகளை எழுப்பி நாட்டை கொதிநிலையில் ஆழ்த்தும். நம் நாட்டின் பழைய வரலாறு, இன்றைய, எதிர்கால தலைமுறைகளை பாதிக்கக்கூடாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டனர்.


Next Story