உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை நிறைவு செய்யக்கோரிய வழக்கில் 15-ந்தேதி இறுதி விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு


உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை நிறைவு செய்யக்கோரிய வழக்கில் 15-ந்தேதி இறுதி விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு
x

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை நிறைவு செய்யக்கோரிய வழக்கில் 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

உக்ரைன் - ரஷியா போரால் உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினர். எனவே மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர்வதற்கு அனுமதி கோரி பஞ்சாப்பை சேர்ந்த அர்ச்சிதா உள்ளிட்ட 7 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவக்கல்வியை இந்தியாவில் நிறைவு செய்வது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் சாதகமான முடிவு எடுத்துள்ளதாக தோன்றுகிறது' என தெரிவித்தார்.

இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு தொடர்பான இறுதி விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story