புகார் அளிக்க வந்தவரின் மகளுக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


புகார் அளிக்க வந்தவரின் மகளுக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகார் அளிக்க வந்தவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு:

விஜயநகர் மாவட்டம் கொட்டூரு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மாரப்பா. இந்த நிலையில், தாவணகெரே மாவட்டம் ஜகலூருவை சேர்ந்த ஒருவர் தனது மகளுடன், கொட்டூரு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்க வந்தார். அப்போது புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ்காரர் மாரப்பா, அந்த நபரின் மகளிடம் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த பெண் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அத்துடன் மாரப்பா மீது கொட்டூரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் கூறினார்கள். அதன்படி, போலீஸ்காரர் மீது அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில், மாரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், போலீஸ்காரர் மாரப்பாவை பணி இடைநீக்கம் செய்து, விஜயநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.


Next Story