வருகிற 5ம் தேதி இந்தியா வருகிறார் சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர்


வருகிற 5ம் தேதி இந்தியா வருகிறார் சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 3 Feb 2024 2:48 AM IST (Updated: 3 Feb 2024 2:51 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவைத் தொடர்ந்து, சீனா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் காசிஸ் பயணம் செய்ய உள்ளார்.

புதுடெல்லி,

சுவிஸ் கூட்டமைப்பின் பெடரல் கவுன்சிலரும், வெளியுறவுத் துறையின் தலைவருமான இக்னாசியோ காசிஸ், வருகிற 5ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. (MEA) கூறினார்.

காசிஸின் பயணத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெடரல் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இக்னாசியோ காசிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சுவிட்சர்லாந்தின் உறவுகளின் வலையமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்து அவரது நோக்கமாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆசியப் பொருளாதாரங்கள் கணிசமான வேகத்தை மீண்டும் பெற்றுள்ளன. இந்தியாவைத் தொடர்ந்து, சீனா, தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் காசிஸ் பயணம் செய்வார்.

அவர் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை புதுடெல்லிக்கான பயணத்துடன் தொடங்குவார். 2018ம் ஆண்டில் சுவிஸ்-இந்திய நட்பின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது இந்தியா விஜயம் இருக்கும். ஜெய்சங்கருடனான அவரது கலந்துரையாடல்களில் இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான "பொருளாதார உறவுகளில் முன்னேற்றம்" மற்றும் "கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு" ஆகியவை அடங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ள

1 More update

Next Story