இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை: அமெரிக்க உயா்மட்டக் குழு இன்று இந்தியா வருகை


இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை: அமெரிக்க உயா்மட்டக் குழு இன்று இந்தியா வருகை
x

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த, அமெரிக்க உயா்மட்டக் குழு இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை மந்திரி டொனால்டு லூ தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 5-ந்தேதி(இன்று) முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக இந்த குழு இன்று இந்தியாவிற்கு வருகை தருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"டொனால்டு லூ மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கிழக்காசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான உதவி இணை மந்திரி கேமில்லே டாவ்சன் ஆகியோா் இந்திய தரப்புடன் '2+2' ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்திய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணை மந்திரி எல்லி ரட்னா் இந்தியாவுடன் கடல்சாா் பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளமை, மீட்சி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்வதில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை விஸ்தரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டங்களில் ஆலோசிக்கப்படவுள்ளன. இந்திய தொழில்துறையினருடன் உயா்நிலைக் குழு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story