காசி- தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச்சங்கம் வெளிக்காட்டியுள்ளது: பிரதமர் மோடி
காசி தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
காசி தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், காசி- தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச்சங்கம் வெளிக்காட்டியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்தில் வலு சேர்த்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச்சங்கத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் அதில் சில கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த யோகதட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.
Related Tags :
Next Story