மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
x

மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமித்ஷாவுடன் கலந்துரையாடியதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்து புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக அந்தமான், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கவர்னர்கள் உள்துறை மந்திரியை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், அண்மையில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story