தார்ச்சாலை அமைக்கும் பணியில் ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப் மூலம் தார் சாலை..! சாலையின் தரம் குறித்து மக்கள் வேதனை...!


தார்ச்சாலை அமைக்கும் பணியில்  ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப் மூலம் தார் சாலை..! சாலையின் தரம் குறித்து மக்கள் வேதனை...!
x

கேரளாவில் தார்ச்சலை அமைக்கும் பணியில் ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப்பை வைத்து தார் சாலை அமைத்தது பொதுமக்களிடையே வேதனையை அளித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மாவுங்கல் பகுதியில், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தார்க்கலவையை சாலையில் கொட்டியபின், ரோடு ரோலருக்கு பதிலாக ஜீப்பை பயன்படுத்தி, சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சாலையின் தரம் குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், ஜீப்பால் சாலை அமைக்கும் பணிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story