பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர் கைது
பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியரிடம் வட்டார கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டம் டாங்கோர்லி பகுதியில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வரும் 52 வயது ஆசிரியர் ஒருவர் 5-ம் வகுப்பு மாணவிகள் 8 பேருக்கு ஆபாச படத்தை காட்டியதாகவும், அவர்களை தவறான முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ஆசிரியரிடம் வட்டார கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையை தொடர்ந்து ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 'போக்சோ' சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Related Tags :
Next Story