பள்ளியில் ஆசிரியை தூக்கம்; விசிறியால் வீசி விட்ட மாணவி: நெட்டிசன்கள் கண்டனம்


பள்ளியில் ஆசிரியை தூக்கம்; விசிறியால் வீசி விட்ட மாணவி:  நெட்டிசன்கள் கண்டனம்
x

பீகாரில் பள்ளி கூடத்தில் தூங்கிய ஆசிரியைக்கு மாணவி விசிறியால் வீசிய சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



பாட்னா,



பீகாரின் பெட்டையா நகரில் கதர்வா என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பபிதா குமாரி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வகுப்பு அறையில் அவர் தூங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

அதில் அவர், ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மற்றொரு நாற்காலியில் கால்களை நீட்டி வைத்து தூங்குகிறார். மற்ற மாணவ மாணவிகள் வகுப்பில் அமர்ந்து படித்து கொண்டு இருக்கின்றனர். ஆசிரியையின் பக்கத்தில் மாணவி ஒருவர் விசிறியால் சிறிது நேரம் வீசி விடுகிறார். பின்னர் சென்று விடுகிறார்.

இந்த வீடியோ பற்றி ஆசிரியையிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உடல்நலம் சரியில்லை என கூறியுள்ளார். வீடியோவானது சமூக ஊடகங்களில் வெளிவந்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் குவிந்துள்ளன.

ஒருவர், நீங்கள் அடிமட்ட அளவில் நன்றாக வேலை செய்கிறீர்கள் என தெரிவித்து உள்ளார். மற்றொருவர், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது கடினம் ஆக உள்ளதா? என கேட்டுள்ளார். மற்றொரு நபர் ஆசிரியை மீது புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


Next Story