குழந்தையை தூக்கி வீசிய ஆசிரியர் - மழலையர் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்... அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி


குழந்தையை தூக்கி வீசிய ஆசிரியர் - மழலையர் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்... அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி
x

ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் கண்டிவலி மேற்கில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் படிக்கும் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரியவரவே பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர்.

அப்போது அந்த குழந்தைகளை ஆசிரியர்கள் அடிப்பதும், துன்புறுத்துவதும் தெரியவந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவது பதிவாகி இருந்தது.

இதை ஆதாரமாக வைத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story