அமெரிக்காவில் குடியேறி 8 ஆண்டுகள் ஆகியும் குஜராத் பள்ளியில் ஊதியம் பெற்று வந்த ஆசிரியர்


அமெரிக்காவில் குடியேறி 8 ஆண்டுகள் ஆகியும் குஜராத் பள்ளியில் ஊதியம் பெற்று வந்த ஆசிரியர்
x

Image Courtesy : PTI

அமெரிக்காவில் குடியேறி 8 ஆண்டுகள் ஆகியும் குஜராத் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஊதியம் பெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் என்ற ஆசிரியர் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும், அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பருல் மெஹ்தா மாவட்ட கல்வித்துறை அதிகாரி வினுபாய் பட்டேலிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், அமெரிக்காவில் குடியேறிய பாவனா பட்டேல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத சம்பளத்தை பெற்று வருவதாகவும், அவர் முறையாக பள்ளிக்கு வராததால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வித்துறை மந்திரி பிரபுல் பன்சேரியா உறுதியளித்துள்ளார். மேலும் அந்த ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் திரும்ப பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story