தொழில்நுட்பம், திறமை இந்தியா வளர்ச்சிக்கான 2 தூண்கள் - பிரதமர் மோடி


தொழில்நுட்பம், திறமை இந்தியா வளர்ச்சிக்கான 2 தூண்கள் - பிரதமர் மோடி
x

தொழில்நுட்பம், திறமை இந்திய வளர்ச்சி பயணத்தின் 2 தூண்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

இரண்டாவது ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் தகவல் கூட்டம் - 2022 ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. கடைசி தொலைவில் உள்ள கடைசி நபருக்கும் அதிகாரம் வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்திற்கான 2 தூண்களாகும். வங்கி சேவை இல்லாத 450 மில்லியன் மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். காப்பீடு இல்லாத 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகை அளவாகும். 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதி செய்து தரப்பட்டுள்ளது. 60 மில்லியன் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதை இந்தியா உறுதி செய்கிறது.

சிறந்த கண்டுபிடிப்பு திறனுடன் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. தொழில் தொடங்குவதில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. 2021-ம் ஆண்டு முதல் தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது திறமையான இந்திய இளைஞர்களால் சத்தியமானது' என்றார்.


Next Story