இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கு: அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கு: அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x

இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

போர்ட்பிளேர்,

அந்தமானின் முன்னாள் தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன் மீது 21 வயதான இளம்பெண் ஒருவர் கூட்டு கற்பழிப்பு புகார் தெரிவித்தார். அதாவது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற ஜிதேந்திர நரைன் பின்னர் பல்வேறு நபர்களுடன் சேர்ந்து கூட்டாக கற்பழித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிதேந்திர நரைன், தொழிலதிபர் சந்தீப் சிங், தொழிலாளர் கமிஷனர் ரிஷிஷ்வர்லால் ஆகியோரை கைது செய்தனர்.

அப்போது டெல்லி நிதித்துறை கழக தலைவராக இருந்த ஜிதேந்திர நரைன் மற்றும் ரிஷிஷ்வர்லால் ஆகியோர் அரசு பணிகளில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த கூட்டு கற்பழிப்பு வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தனர். 935 பக்க இந்த குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story