13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் - அதிர்ச்சி சம்பவம்
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் ரங்கோலா என்ற பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பில் தம்பதி 2 மகள்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் (வயது 30) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story