ஜார்கண்ட்: நண்பர்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!


ஜார்கண்ட்: நண்பர்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!
x

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆற்றினருகே நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஜாம்ஷெட்பூர்,

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆற்றினருகே நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விக்ராந்த் சோனி என்ற சிறுவன் ஜாம்ஷெட்பூரின் பாக்பேடா காவல் நிலையப் பகுதியில் உள்ள கார்காய் ஆற்றுக்கு நேற்று தனது சகோதரர் மற்றும் 4 நண்பர்களுடன் சென்றார்.

அப்போது நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது விக்ராந்த் ஆற்றில் தவறி விழுந்தார். நீரோட்டம் வேகமாக இருந்ததால் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். விக்ராந்தை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரரும் நீரில் மூழ்கத் தொடங்கினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

ஆனால் விக்ராந்த் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 2 மணி நேரம் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story