தெலுங்கானா: போலீசாரை தாக்கிய ஆந்திர முதல்-மந்திரியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளாவுக்கு 14 நாள் போலீஸ் காவல்


தெலுங்கானா:  போலீசாரை தாக்கிய ஆந்திர முதல்-மந்திரியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளாவுக்கு 14 நாள் போலீஸ் காவல்
x

தெலுங்கானாவில் போலீசாரை தாக்கிய ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரிக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கனாவில் அரசு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் டி.எஸ்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணை குழுவிடம் சில ஆவணங்களை காட்ட ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ். ஷர்மிளா காரில் சென்றார்.

ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த ஷர்மிளா, பெண் போலீசாரை தாக்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பெண் போலீசார் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், நம்பள்ளி கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். இதில், சர்மிளாவுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் அவரை போலீசார் காவலுக்கு கொண்டு சென்று உள்ளனர்.


Next Story