தெலங்கானா: எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - 3 கார்கள் சேதம்


தெலங்கானா: எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - 3 கார்கள் சேதம்
x

லக்ட்ரிக் காரில் தீப்பிடித்து எரிந்து, அது மற்ற கார்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள நுமைஷ் வணிக வளாக பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் 3 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் 3 கார்கள் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக் காரில் முதன் முதலாக தீப்பிடித்து எரிந்ததாகவும், அது மற்ற கார்களுக்கு பரவியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story