தெலுங்கானாவில் உலகின் முதல் 3டி பிரிண்டிங் கோவில்


தெலுங்கானாவில் உலகின் முதல் 3டி பிரிண்டிங் கோவில்
x

4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 35.5 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள புருகுபள்ளியில் 3டி வடிவமைப்பில் கோவிலை (3D-printed temple) கட்டியுள்ளனர். இது 3டி வடிவமைப்பில் உருவான உலகின் முதல் கோவிலாகும். இந்த தனித்துவமான கோவிலின் 3டி பிரின்ட் எடுக்க சுமார் 3 மாதங்கள் ஆனது.

4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 35.5 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழுக்கட்டை வடிவில் விநாயகருக்கு ஒரு கருவறையும், சதுர வடிவில் சிவபெருமானுக்கு ஒரு கருவறையும், தாமரை மலர் போன்ற வடிவில் பார்வதி தேவிக்கு ஒரு கருவறையும் என 3 கருவறைகள் அமைத்துள்ளனர்.

3 கோபுரங்கள் மற்றும் 3 கருவறைகள் 3டி பிரிண்டிங் ரோபோடிக் கட்டுமான வசதியுடன் உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. மேலும் பில்லர்கள், பலகைகள் மற்றும் தரைகள் வழக்கமான கட்டுமான நுட்பங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான இயற்கை சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று தலைமை இயக்க அதிகாரி அமித் குலே தெரிவித்தார்.


Next Story