தெலுங்கானா: உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா, ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உரம் மற்றும் ரசாயன தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'கடந்த 2,3 ஆண்டுகளாக உலகம் கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. மறுபுறம், பிரச்சினைகள் உள்ளன, இராணுவ நடவடிக்கைகள் நடைபெறுகின்றன, அவற்றின் விளைவுகளும் நாட்டையும் உலகையும் பாதிக்கின்றன.
ஆனால் இந்த நெருக்கடியான நேரத்திலும் உலகில் உள்ள அனைவரும் இன்னும் ஒன்றைக் கேட்கிறார்கள்.. இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், அந்த திசையில் மிக வேகமாக நாடு முன்னேறி வருவதாகவும் உலக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 1990-ம் ஆண்டிற்கு பிறகு, கடந்த மூன்று தசாப்தங்களில் நாடு கண்ட வளர்ச்சி, கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக ஒரு சில ஆண்டுகளில் நிகழும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில், நிர்வாகத்திலும், சிந்தனை முறையிலும், அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.