காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சலுகை- ராகுல் காந்தி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா  பெண்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சலுகை- ராகுல் காந்தி
x
தினத்தந்தி 2 Nov 2023 9:35 PM IST (Updated: 3 Nov 2023 7:51 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் ஊழலால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி பேசினார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானாவில் காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி கூறியதாவது: சந்திரசேகர் ராவின் ஊழலால் தெலங்கானாவில் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4,000 வரையில் கிடைக்கும். அதில் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும், கேஸ் சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ. 1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்று தெரிவித்தார்.


Next Story