டெல்லியில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தலைநகர் டெல்லியில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 39.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட குறைவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைநகரில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மழையானது, உச்சத்தில் இருந்த வெப்பநிலையை குறைத்து இதமான சூழலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story