பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டாவுடன் தம்பிதுரை சந்திப்பு


பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டாவுடன் தம்பிதுரை சந்திப்பு
x

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டாவுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தம்பிதுரை பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இருந்தும் இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், பாஜக – அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், சமீபத்தில் பிரதமர் மோடியையும், நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழந்துள்ளது. முன்னதாக, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story